கொரோனா வைரஸ் மரபணு மாற்றமா..? கேரளாவில் தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று

0 2906
கேரளாவில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

கேரளாவில்  முழுமையாக  தடுப்பூசி போட்டவர்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. 

இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி முழு அளவில் பெற்றும் நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் மாதிரிகளை மரபியல் வரிசை சோதனைக்காக அனுப்புமாறு கேரள அரசை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

இந்த சோதனையில்  தொற்று ஏற்பட்ட நபர்களிடம் எந்த வகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது மற்றவர்களின் மாதிரியோடு ஒப்பிட்டு பார்க்கப்படும்.

தடுப்பூசி வழங்குகிற பாதுகாப்பையும் மீறி தொற்றை ஏற்படுத்தும் வகையில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் எடுத்துள்ளதா? கொரோனா தொற்றில் ஏற்பட்டுள்ள இந்த முறைக்கு, வேகமாக பரவும் டெல்டா மரபணு மாற்ற வைரஸ் காரணமா எனவும் ஆராயப்பட உள்ளது.

கேரளாவில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அதிகபட்சமாக முதல் டோஸ் போட்டவர்களில் 14 ஆயிரத்து 974 பேருக்கும், இரண்டாவது டோசை போட்ட பிறகும் 5 ஆயிரத்து 42 பேருக்கும்  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments