உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான குரூஸ் ஏவுகணை சோதனை ஓட்டம் வெற்றி

0 2121
உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரான குரூஸ் ஏவுகணை சோதனை ஓட்டம் வெற்றி

உள்நாட்டு தொழில் நுட்பத்தில் டிஆர்டிஒ தயாரித்துள்ள குரூஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் நடைபெற்ற சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 150 கிலோ மீட்டர் வரை பாய்ந்து சென்று ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

ஏவுகணை செலுத்த பயன்படுத்தப்பட்ட என்ஜினும் எதிர்பார்த்தபடி சிறப்பாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் அதிக தொலைவில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படுத்தப்படும் இந்த ஏவுகணையை மேம்படுத்துவதற்கு இன்னும் சில சோதனைகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments