பேருந்தில் சிக்கி முறிந்த கால்கள்.. அலட்சியத்தால் அரங்கேறிய விபரீதம்

0 8185
ஆந்திராவில் பரபரப்பான சாலையில் தவறான திசையில் இருசக்கர வாகனத்தை செலுத்திய பெண்ணின் மீது அரசுப் பேருந்து மோதி, முன்சக்கரம் ஏறியதில் அவரது இரண்டு கால்களின் எலும்புகளும் முறிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விநாடி நேர அலட்சியம் எவ்வளவு விபரீதத்தை உருவாக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

ஆந்திராவில் பரபரப்பான சாலையில் தவறான திசையில் இருசக்கர வாகனத்தை செலுத்திய பெண்ணின் மீது அரசுப் பேருந்து மோதி, முன்சக்கரம் ஏறியதில் அவரது இரண்டு கால்களின் எலும்புகளும் முறிந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விநாடி நேர அலட்சியம் எவ்வளவு விபரீதத்தை உருவாக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

கடந்த திங்கட்கிழமை ஆந்திர மாநிலம் அனந்தபுரதம் மணிக்கூண்டு அருகேயுள்ள சாலை சந்திப்பில் வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருந்தன. பச்சை விளக்கு விழுவதற்கு மிகச்சில விநாடிகள் இருந்த நிலையில், தனது தங்கையுடன் இருசக்கர வாகனத்தில் ஒருவழிப் பாதையில் வந்த ஒரு பெண், தவறான திசையில் இருந்து பிரதான சாலைக்குள் வாகனத்தைச் திருப்ப முயன்றார். அப்போது பச்சைவிளக்கு விழுந்து அங்கு நின்றிருந்த அரசுப் பேருந்து உட்பட வாகனங்கள் நகரத் தொடங்கின. திடீரென குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் பெண்கள் இருவரும் கீழே விழுந்தனர். இதில் வாகனத்தை ஓட்டி வந்த பெண்ணின் இரண்டு கால்களும் பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கிக்கொண்டன.

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த பெண் காயங்களின்றி தப்பினார். பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய பெண்ணின் இரண்டு கால் எலும்புகளுமே முறிந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விசாரணையில் நாகலட்சுமி என்ற அந்தப் பெண் அயர்லாந்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்துள்ளார் என்பதும், உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையைக் காண்பதற்காக சொந்த ஊர் வந்ததும் தெரியவந்தது. தனது அலட்சியம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகவும் எனவே வழக்கு எதுவும் தேவையில்லை என்றும் நாகலட்சுமி தெரிவித்ததால் போக்குவரத்து போலீசாரும் வழக்கு பதிவு செய்யவில்லை.

சிறிய அளவிலான கவனக்குறைவுகூட ஒட்டுமொத்த வாழ்க்கையை முடக்கிப் போட்டுவிடும் என்று கூறும் போலீசார், போக்குவரத்து விதிகளை அலட்சியம் செய்யாமல் கடைபிடிப்பதே எல்லோருக்கும் நல்லது என்கின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments