"நீரஜ்" என பெயர் வைத்திருந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் - அதிரடி காட்டிய தனியார் பெட்ரோல் பங்க்

0 2799
"நீரஜ்" என பெயர் வைத்திருப்பவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசமென கரூரிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று அறிவித்துள்ளது.

"நீரஜ்" என பெயர் வைத்திருப்பவர்களுக்கு  2 லிட்டர் பெட்ரோல் இலவசமென கரூரிலுள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று அறிவித்துள்ளது.

நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக்கில்  ஈட்டி எறிதல் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில், திருமாநிலையூரிலுள்ள அரவிந்த் ஏஜென்ஸீஸ் பெட்ரோல் பங்கில், அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

அதில், "நீரஜ்" என பெயர் வைத்திருப்பவர்கள் ஆதார் அட்டையுடன் பெட்ரோல் பங்கிற்கு வந்தால், 2 லிட்டர் பெட்ரோல் இலவசமென்றும், இச்சலுகை இன்று முதல் 3 நாட்கள் வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments