முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதி ; ரத்த குழாயில் வெடிப்பு ஏற்பட்டதாகத் தகவல்

0 3031
தீவிரச் சிகிச்சைப் பிரிவில் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்ஸ்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயிர்ன்சுக்கு இரத்தக் குழாய் வெடித்ததால் ஆஸ்திரேலிய மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1989 முதல் 2006 வரை நியூசிலாந்து அணிக்கு 62 டெஸ்ட், 215 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் கெயிர்ன்ஸ், தனி ஒருவராக ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன்கொண்ட ஆல்ரவுண்டராக விளங்கினார். கடந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்தார்.

இதையடுத்து சிட்னியில் உள்ள மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயத்தில் இருந்து ரத்தம் செல்லும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் நிலைகுலைந்து மயங்கி விழுந்ததாகத் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments