அடுத்த 24 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2197

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, நாமக்கல், சேலம், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகையில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளைய தினமும் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் இரு நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தெற்கு மற்றும் மத்திய வங்கக் கடல், தெற்கு அந்தமான் கடலோர பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் 5 நாட்களுக்கு அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments