செப்டம்பர் 1ந் தேதி முதல் பள்ளிகளை திறக்க தயார் - அமைச்சர் அன்பில் மகேஷ்

0 5170
செப்டம்பர் 1ந் தேதி முதல் குறிப்பிட்ட வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க தயார் நிலையில் உள்ளோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

செப்டம்பர் ஒன்று முதல் பள்ளிகளைத் திறக்கத் தயாராக உள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிகளைத் திறப்பது குறித்துச் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் அன்பில் மகேஷ் அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

தனியார் பள்ளிகளில் இருந்து விலகி 2 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். கொரோனா சூழலில் மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறியுள்ளனரா என்பது குறித்துக் கண்டறிய ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments