ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

0 1704
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 9 மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

2019 டிசம்பரில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தியபோது, புதிய மாவட்டங்கள் பிரிப்பு காரணமாக 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தவில்லை. இவற்றில் செப்டம்பர் 15ஆம் நாளுக்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments