ஜி.ஐ.சாட் 1 செயற்கைக்கோள்- இந்தியாவுக்கு விண்ணில் ஒரு கண்!

0 2286

ஜி.ஐ.சாட் 1  செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய’ உள்ள ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுன்  அதிகாலை தொடங்கியது.

விண்வெளியில் இந்தியாவின் கண்ணாக இருக்கும் என வர்ணிக்கப்படும் ஜி.ஐ.சாட் 1 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 5 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. சென்னைக்கு அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இது விண்ணில் சீறிப்பாய உள்ளது. அதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 3 மணி 43 நிமிடங்களுக்கு துவங்கி விட்டதாக இஸ்ரோ டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

ஜி.ஐ.சாட் 1 என்பது புவியை கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும். அது பூமியின் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர், பூமியின் சுழற்சி வேகத்திற்கு இணையான வேகத்தில் பூமியை சுற்றி வரும், அப்போது அது ஒரு நிலையான இடத்தில் இருப்பதை போல இருக்கும். நமக்கு தேவையான இடங்களை அது கண்காணித்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல்களை அனுப்பும்.

இயற்கை பேரழிவுகள் குறித்த முன்னெச்சரிக்கைகளை அதிவேகத்தில் அது அனுப்பும். வேளாண்மை, வனம், சுரங்கம், வானிலை, கடல் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை சேகரிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் என கூறப்படுகிறது. 2 ஆயிரத்து 268 கிலோ எடை உள்ள இந்த செயற்கைக்கோள் முதன்முறையாக இஸ்ரோவால் Ogive வடிவத்தில் 4 மீட்டர் சுற்றளவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்.10 ராக்கெட், புவி ஒத்திசைவுக்கு ஏற்ற செயற்கைக் கோளை சுமந்து செல்லும் 14 ஆவது ராக்கெட்டாகும்.

சுதந்திர தினத்திற்கு முன்னர் இதை விண்ணில் ஏவி விட வேண்டும் என திட்டமிட்டுள்ளாலும், கால நிலைக்கு ஏற்ப அது மாறவும் வாய்ப்புள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments