கல்குவாரியில் நீச்சல் பழக சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

0 2179

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கல்குவாரியில் நீச்சல் பழக சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

டொக்குவீரன் பட்டியிலுள்ள தாத்தா கவுண்டன் பாறை குளத்தில் நீச்சல் பழுகுவதற்காக சென்ற  ரஜாக், குமார் ஆகிய 2 சிறுவர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் நள்ளிரவு வரை தேடியும் இருவரையும் காணவில்லை. இந்நிலையில் இன்று காலை 2 சிறுவர்களும் சடலமாக மீட்கப்பட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments