அமெரிக்காவில் காட்டுத் தீயில் சிக்கி முற்றிலும் அழிந்து போன கிரீன் வில்லே நகரம்..

0 2611
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியரா நெவாடா மலைகளில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் அங்குள்ள தங்க சுரங்கங்களின் மத்தியில் அமைந்துள்ள கிரீன் வில்லே நகரம் முற்றிலும் அழிந்து போனது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சியரா நெவாடா மலைகளில் தொடர்ந்து எரியும் காட்டுத்தீயால் அங்குள்ள தங்க சுரங்கங்களின் மத்தியில் அமைந்துள்ள கிரீன் வில்லே நகரம் முற்றிலும் அழிந்து போனது.

டிக்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டுத் தீ முன்னதாக 2 லட்சத்து 74 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்தது. தற்போது அது மேலும் பரவி 4 லட்சத்து 89 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிற்கு கொளுந்து விட்டு எரிகிறது.

கிரீன் வில்லே நகரத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். 150 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையே 800 பேர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments