அல்ஜீரியாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 25 வீரர்கள் உயிரிழப்பு

0 2017

அல்ஜீரியா நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட 25 ராணுவ வீரர்களும் பொதுமக்களில் 7 பேரும் உயிரிழந்தனர்.

தலைநகர் அல்ஜியர்ஸ் கிழக்குப் பகுதியில் உள்ள டிசி ஓசோ மாகாணத்தின் வனத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. கட்டுக்கடங்காமல் எரியும் நெருப்பினால் வனப்பகுதியை ஒட்டி குடியிருப்பவர்களை ராணுவத்தினர் வெளியேற்றி வருகின்றனர்.

ஹெலிகாப்டர் மூலம் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினரில் 13 பேர் காயமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments