ஏடிஎம்களில் பணம் இல்லாத வங்கிகளுக்கு அபராதம் -ரிசர்வ் வங்கி அறிவிப்பு

0 3737

அக்டோபர் மாதம் முதல், ஏடிஎம்களில் வாடிக்கையாளர் பணம் எடுக்க முயற்சிக்கும் போது பணமில்லாமல் இருந்தால் வங்கிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

ஏடிஎம்களில் பணமில்லாத சூழலில் வாடிக்கையாளர்கள் இன்னலுக்குள்ளாவதைத் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு மாதத்தில் பத்து மணி நேரத்துக்கு மேல் பணமின்றி இருக்கும் ஒவ்வொரு ஏடிஎம்முக்கும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

ஏடிஎம்களில் பணமில்லாதது குறித்த மாதாந்திர அறிக்கையை மறு மாதத்தின் முதல் ஐந்து நாட்களுக்குள் ரிசர்வ் வங்கியின் வெளியீட்டுத் துறைக்கு வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments