உட்கட்சிப் பூசலை மறந்து ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்: பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தருக்கு சோனியாகாந்தி அறிவுறுத்தல்

0 3750

உட்கட்சிப் பூசல்களை மறந்து ஒற்றுமையுடன் இருக்கும்படி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்தர் சிங்கை அறிவுறுத்தியுள்ளார்.

சோனியா காந்தியை அம்ரிந்தர்சிங் சுமார் ஒருமணி நேரம் சந்தித்துப் பேசினார் .இதில் அமைச்சரவை மாற்றம் குறித்து ஆலோசனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அண்மையில் அவருடைய எதிர்ப்பை மீறி நவ்ஜோத் சித்து பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

சித்துவின் ஆதரவாளர்கள் சிலரை அமைச்சர்களாக நியமிக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments