லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. ரூ. 13.08 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்..!

0 3019

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத பணம் 13 லட்ச ரூபாய் உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்தங்களை,நெருக்கமானவர்களுக்கு வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் என 17 பேர் மீதும், அடையாளம் கூறப்படாத அதிகாரிகள் உள்ளிட்ட பிறர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் எஸ்.பி. வேலுமணி தொடர்புள்ளதாகக் கூறப்படும் 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். 7 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 13 லட்சத்து  8 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் குற்றச்சாட்டு தொடர்புடைய ஆவணங்கள், நிறுவனங்களின் பரிவர்த்தனைகள், 2 கோடி ரூபாய் வரையிலான வைப்புத்தொகை ஆவணங்கள், மாநகராட்சி சம்மந்தப்பட்ட ஆவணங்கள், பதிவேடுகள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் தங்கியிருந்த எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  நேற்று மாலையுடன் சோதனை மற்றும் விசாரணை நிறைவடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments