ரூ. 2.63 லட்சம் கடனை அரசுக்கு திருப்பிச் செலுத்துவதாக காசோலையுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த காந்தியவாதி.. நாமக்கல்லில் பரபரப்பு

0 6265
நாமக்கல்லில் காந்தியவாதி ஒருவர் தன் குடும்பத்தின் மீதான 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கடனை அரசுக்கு திருப்பிச் செலுத்துவதாக காசோலையுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

நாமக்கல்லில் காந்தியவாதி ஒருவர் தன் குடும்பத்தின் மீதான 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கடனை அரசுக்கு திருப்பிச் செலுத்துவதாக காசோலையுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அரசு நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்ட நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் மீதும்  2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் கடன் சுமை உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாலப்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் தியாகராஜன் என்பவர் 2 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் தொகைக்குரிய காசோலையுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார்.

தங்கள் குடும்பத்தின் மீதான கடன் தொகையை திரும்பப் பெற்றுக்கொண்டு, சுயதொழில் செய்ய 15 லட்ச ரூபாய் கடன் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவருடைய காசோலையை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments