டூயல் சிம் விக்டோரியா டைரி ரகசியம்..! கொலையில் துப்பு துலங்கியது

0 5353
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சமத்துவபுரத்தில் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் தற்கொலை சம்பவத்தை விசாரிக்க சென்ற போலீசார், அங்கிருந்த டைரியில் இருந்த தகவலை வைத்து கொலை சம்பவத்தை கண்டறிந்தனர். டூயல் சிம் விக்டோரியாவின் ரகசிய டைரியால் துப்பு துலங்கிய கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள சமத்துவபுரத்தில் கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவரின் தற்கொலை சம்பவத்தை விசாரிக்க சென்ற போலீசார், அங்கிருந்த டைரியில் இருந்த தகவலை வைத்து கொலை சம்பவத்தை கண்டறிந்தனர். டூயல் சிம் விக்டோரியாவின் ரகசிய டைரியால் துப்பு துலங்கிய கொலை சம்பவத்தின் பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சின்னகலையமுத்துர் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் 41 வயதான விக்டோரியா என்ற பெண், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் விக்டோரியாவிற்கு திருமணமாகி அய்யனார் என்ற கணவரும், திருமண வயதில் இரண்டு மகன்களும் உள்ள நிலையில், விக்டோரியா தனது கணவரையும் மகன்களையும் பிரிந்து பலஆண்டுகளாகவே தனியாக வசித்து வருவது தெரியவந்தது. விக்டோரியாவின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார், வீட்டில் உள்ள தடயங்களை சேகரித்த போது விக்டோரியாவின் டைரி ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அதில் தனது சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், பத்மநாபனை, சங்கர் கொலை செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்வதாக எழுதிவைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே விக்டோரியா வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையை தீவிரப்படுத்தினார். டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள பத்மநாபனும், சங்கரும் யார் ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்த போது தனிமை விக்டோரியாவின் டூயல் சிம் காதல் விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

கொலை செய்யப்பட்ட நபர், விக்டோரியாவின் டைரியில் குறிப்பிட்டிருந்த பாப்பம்பட்டியை சேர்ந்த பத்மாநாபன் என்பது தெரியவந்தது. பத்மநாபனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள நிலையில் அவர், தன்னுடன் மடத்துக்குளம் காகித ஆலையில் வேலை பார்த்த தன்னை விட 10 வயது மூத்தவரான விக்டோரியாவின் காதல் வலையில் விழுந்துள்ளார். அவ்வப்போது காதலியின் வீட்டிற்கு ரகசியாமக சென்று வந்துள்ளார்.

தொலைவில் உள்ள பத்மநாபனுடன் ஒரு சிம் கார்டில் பேசிவந்த விக்டோரியா, பக்கத்து வீட்டில் வசிக்கும் சங்கர் என்பவருடனும் நீண்ட நாட்களாக பேச்சு வார்த்தையாக இருந்துவந்ததாக கூறப்படுகின்றது. திங்கட்கிழமை இரவு விக்டோரியா வீட்டுக்குச்சென்ற சங்கர், அங்கு விக்டோரியாவுடன் பத்மநாபன் தனிமையில் இருப்பதை பார்த்து ஆவேசமாகி இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று கருதும் போலீசார் கொலை சம்பவத்திற்கு பின்னர் சங்கர், விக்டோரியாவிடம் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்கின்றனர்.

அதே போல கணவரை பிரிந்து தனியாக வாழ்வதாக வெளியில் காட்டிக் கொண்ட நிலையில், இருவருடன் முறை தவறிய தொடர்பில் இருந்த தகவல் வெளிச்சத்திற்கு வந்ததால், அவமானத்திற்கு பயந்து விக்டோரியா இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டாரா ? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்க்கிடையே பத்மநாபன் கொலை தொடர்பாக போலீசார் தன்னை தேடுவதாக கூறி சங்கர், பழனி சார்பு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதால், சம்பவம் குறித்த உண்மைகளை அறிய, சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். விக்டோரியா வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ள கையெழுத்து அவருடையதா அல்லது அது சங்கருடையதா ? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments