கோவையை பரபரக்க வைத்த சோதனை... நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்ட போலீசார்

0 4435
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சுகுணாபுரம் வீடு மற்றும் அலுவலகங்களில் காலை முதலே நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்றது.

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சுகுணாபுரம் வீடு மற்றும் அலுவலகங்களில் காலை முதலே நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்றது. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலுமணியின் வீட்டு முன்பு ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டதால், ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு, அலுவலகம் என 42 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. கோவை சுகுணாபுரத்தில் எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெறுவதை அறிந்து, அங்கு திரண்ட வேலுமணி ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, போலீசார் வைத்திருந்த பேரிகார்டை சிலர் தூக்கி வீசியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

அசம்பாவிதத்தை தவிர்க்க எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு முன் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டனர். அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியபோதும், அவர்கள் கலைந்து செல்லவில்லை.

கோவைப்புதூரிலுள்ள, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

எஸ் பி வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா இல்லத்தில் காலை 6 மணிக்கு தொடங்கி, சுமார் 7மணி நேரமாக நடத்தப்பட்ட சோதனை நிறைவடைந்தது. ஆவணங்கள் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சான்று வழங்கிவிட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை வடவள்ளியில் புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞரணி நிர்வாகி சந்திரசேகர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வரவு செலவு கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாயானது. சந்திரசேகருக்கு சொந்தமான கார் மற்றும் தோட்டத்திலும் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என சோதனையிட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்திரபிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்னக்காம்பட்டி புதூரில், கோவை மாநகராட்சி முன்னாள் உதவி ஆணையர் மதுராந்தகி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மதுராந்தகியின் தந்தை சதாசிவம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறவினர் என்று சொல்லப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments