லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. ரூ. 13.08 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்..!

0 2937
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. ரூ. 13.08 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்..

சென்னை, கோவை, திண்டுக்கல் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய 60 இடங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத பணம் 13 லட்ச ரூபாய் உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்தங்களை, தனது சகோதரர், உறவினர்கள், நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் என 17 பேர் மீதும், அடையாளம் கூறப்படாத அதிகாரிகள் உள்ளிட்ட பிறர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ், லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 60 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் இறங்கினர்.

சோதனையில் கணக்கில் வராத 13 லட்சத்து 8 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் குற்றச்சாட்டு தொடர்புடைய ஆவணங்கள், நிறுவனங்களின் பரிவர்தனைகள், 2 கோடி ரூபாய் வரையிலான வைப்புத்தொகை ஆவணங்கள், மாநகராட்சி சம்மந்தப்பட்ட ஆவணங்கள், பதிவேடுகள், கம்ப்பியூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments