நேதாஜி உருவப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க கோரிய வழக்கு தள்ளுபடி..

0 2208
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சடிக்க உத்தரவிட கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை மத்திய அரசு பரிசீலனை செய்ய உத்தரவிடப்பட்ட  நிலையில், மத்திய அரசு மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தது.

இந்நிலையில், அந்த உத்தரவை ரத்து செய்து ரூபாய் நோட்டுகளில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உருவப்படத்தை அச்சடிக்க மத்திய அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க கோரி மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாத்மா காந்தியை தவிர வேறு இந்திய தலைவர்களின் படங்களை அச்சடித்தால் அவர்கள் மீது மதம் மற்றும் சாதி ரீதியாக சாயம் பூசப்படும் என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments