மருத்துவப் படிப்புகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்

0 2972
மருத்துவப் படிப்புகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை மத்திய அரசுக்கு ஒதுக்கிய பின், தமிழக இட ஒதுக்கீடுக்கு எப்படி பொருந்தும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சனும், மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நடராஜனும் தங்களது வாதத்தை முன் வைத்தனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மத்திய அரசு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை, மாநிலங்களுக்கு திரும்ப வழங்கினால் மட்டுமே தமிழக அரசு இட ஒதுக்கீடு பின்பற்ற முடியும் என தெரிவித்தனர். வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடையாததால், வழக்கின் விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments