எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்களுக்கு காலை, மதிய உணவு விநியோகம்

0 3895
எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்களுக்கு காலை, மதிய உணவு விநியோகம்

கோவை சுகுணாபுரத்தில், எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, உப்புமா, பொங்கல், பகலில் ரோஸ் மில்க், மதிய உணவாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது.

சுகுணாபுரத்தில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் ரெய்டு நடைபெறுவதை அறிந்து, அவரது ஆதரவாளர்கள் அங்கு காலை முதலே திரளத் தொடங்கினர். குறிப்பாக பெண்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு, வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டனர். காலை நேரத்தில் சிற்றுண்டியாக இட்லி, உப்புமா, பொங்கல், தண்ணீர் பாட்டில் விநியோகிக்கப்பட்டது.

அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டைக் கண்டித்து, எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பகலில் ரோஸ் மில்க்கும், மதிய உணவாக தக்காளி சாதமும் விநியோகிக்கப்பட்டது. போலீசார் பல முறை அறிவுறுத்தியும் கூட்டம் கலைந்துசெல்லவில்லை. இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்க, பெண் காவலர்கள் உள்ளிட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments