மாஸ்க் போடலான அவ்வளவுதான்... வடிவேலு கெட்டப்பில் அலப்பறை கொடுக்கும் கிராமியக்கலைஞர்!

0 1957
புதுக்கோட்டை அருகே,கிராமியக்கலைஞர் ஒருவர், மக்களிடத்தில் வடிவேலு கெட்டப்பில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

புதுக்கோட்டை அருகே,கிராமியக்கலைஞர் ஒருவர், மக்களிடத்தில் வடிவேலு கெட்டப்பில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கலபம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளவரசன். கிராமிய கலைஞரான இவர் கொரோனா தொற்றால் ஏற்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் இழந்தவர்.

எனினும், கொரோனா விதிமுறைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவர் நடத்தி வருகிறார். நகைச்சுவை நடிகர் வடிவேலு போல் வேடமணிந்து கிராமிய நிகழ்ச்சிகளில் பொது மக்களை கவர்ந்து வந்த இளவரசன் அவரது சொந்த ஊரான கலபம் கிராமத்தில் கொரோனா மூன்றாவது அலை குறித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

நடிகர் வடிவேலு போல வேடமணிந்து உடல் மொழி காட்டி நடித்து முக கவசம் அணிய வேண்டுமென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதை கண்டு மக்கள் ரசித்தனர்.

மேலும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும், அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும், கைகளை முறையாக கழுவுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.கிராம மக்களுக்கும் இலவசமாக முக கவசங்களை வழங்கிய இளவரசன் விரைவில் கொரோனாவில் இருந்து மீள்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments