எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு - தலைமை நீதிபதி என்வி ரமணா

0 1669
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிக்க சிறப்பு பிரிவு

எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை கண்காணிக்க உச்ச நீதிமன்றத்தில் தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுவதாக தலைமை நீதிபதி என்வி ரமணா தெரிவித்துள்ளார்.

பொது நல வழக்கு ஒன்றின் விசாரணையின் போது இதை தெரிவித்த அவர், எம்பி, எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் இருக்கும் வழக்குகளை, உயர் நீதிமன்ற ஒப்புதல் இன்றி அரசு வழக்கறிஞர்கள் திரும்ப பெறக் கூடாது என உத்தரவிட்டார். எம்பி, எம்எல்ஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதிகளை அடுத்த உத்தரவு வரும் வரை இடமாற்றம் செய்யக்கூடாது எனவும் நீதிபதி என்வி ரமணா அமர்வு உத்தரவிட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments