ஜார்ஜ் பொன்னையாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை..

0 2524
ஜாதி, மதம் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய புகாரில் கைதான பங்கு தந்தை ஜார்ஜ் பொன்னையாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சர்ச்சை பேச்சுக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டதாக கூறிய ஜார்ஜ் பொன்னையா, இருதய நோய் மற்றும் வயது முதிர்வை காரணம் காட்டி ஜாமீன் கோரியிருந்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும், வரும் காலங்களில் அரசியல் பிரச்சனைகளை தூண்டும் வகையிலோ, அமைதியை குலைக்கும் வகையிலோ பேச மாட்டேன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் ஜார்ஜ் பொன்னையாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments