7 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் மகன் ; சிகிச்சைக்கு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை

0 1654
7 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் மகன் ; சிகிச்சைக்கு உதவ வேண்டும் என பெற்றோர் கோரிக்கை

தஞ்சாவூரில் விபத்தில் சிக்கி 7 ஆண்டுகளாக படுத்த படுக்கையாக கோமாவில் இருக்கும் மகனின் மருத்துவ சிகிச்சைக்கு உதவக் கோரி, அவரை ஆம்புலன்ஸில் அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மனு அளித்தனர்.

பொட்டுவாச்சாவடியை சேர்ந்த ஸ்டாலின் என்ற அந்த இளைஞர் கடந்த 2015-ல் சாலை விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றார். ஸ்டாலினுக்கு 30லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் காப்பீடு நிறுவனத்திற்கு தஞ்சாவூர் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இருப்பினும், வழக்கை நடத்திய வழக்கறிஞர் இழப்பீட்டை பெற்றுத்தர இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், மகனுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவக் குழுவை அமைப்பதோடு, இழப்பீடை பெற்றுத் தர வேறொரு வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்தியும் பெற்றோர் ஆட்சியரிடம் வந்து மனு அளித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments