மதில் சுவர் இடிப்பதில் இருவீட்டார் இடையே பிரச்சனை ; ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியீடு

0 3194
மதில் சுவர் இடிப்பதில் இருவீட்டார் இடையே பிரச்சனை ; ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியீடு

சென்னையை அடுத்த ஆவடியில் மதில் சுவரை இடிப்பது தொடர்பான பிரச்சினையில் இரு வீட்டு குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

வெள்ளானூர் பகுதியைச் சேர்ந்த சுகுமார் வீட்டுக்கும், பக்கத்து வீட்டுக்காரரான சத்தியமூர்த்தி வீட்டுக்கும் நடுவே மதில் சுவர் ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் இந்த சுவரால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி சத்தியமூர்த்தி அதை இடிக்க ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த சுகுமார் குடும்பத்தினர் அதை இடித்தால் தங்கள் வீட்டிற்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி சத்தியமூர்த்தி குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. வாக்குவாதம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாற, இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தக்கிக்கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments