அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்..!

0 6782
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக ஆர்.வேல்ராஜ் நியமனம்..!

அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், அவற்றிலிருந்து 3 பேரின் பெயர்களை தேடல் குழு ஆளுநருக்கு பரிந்துரைத்தது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்த வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு முதல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் வேல்ராஜ், அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தர் பதவியில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை சுரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்ட போது, வெளிமாநிலத்தவர் என்று எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்தவரே துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments