படுத்த படுக்கையான மனைவியை 15 ஆண்டுகளாக குழந்தை போல் பராமரிக்கும் கணவர்..! உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

0 28602
படுத்த படுக்கையான மனைவியை 15 ஆண்டுகளாக குழந்தை போல் பராமரிக்கும் கணவர்..! உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கை, கால்கள் செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்கும் மனைவியை, 15 ஆண்டுகளாக குழந்தையை போல் பராமரித்து வரும் கணவருக்கு தமிழக அரசு உதவிக் கரம் நீட்டியுள்ளது.

இது தொடர்பான செய்தி வெளியான நிலையில், நெப்போலியன் - மஞ்சுளா தம்பதியின் வீட்டுக்கு சென்ற மாற்று திறனாளிகள் மறுவாழ்வு மைய அலுவலர் சரவணகுமார், அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பராமரிப்பு தொகை 1,500 ரூபாயும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருந்திய நவீன வீல் சேரும், மஞ்சுளாவுக்கு உடலில் புண்கள் ஏற்படாமல் இருக்க தண்ணீர் நிரப்பிய படுக்கையும், உடனிருந்து பராமரிக்கும் கணவர் நெப்போலியனுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், நெப்போலியன் வீட்டில் இருந்தே தொழில் செய்யும் வகையில் மானியத்துடன் கூடிய ஒரு லட்சம் ரூபாய் கடனுதவியும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments