டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 தங்க பதக்கங்களை வென்ற இத்தாலி வீரர் மார்செல் ஜேக்கப்சுக்கு ரோம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

0 3100
டோக்கியோ ஒலிம்பிக்கில் 2 தங்க பதக்கங்களை வென்ற இத்தாலி வீரர் மார்செல் ஜேக்கப்சுக்கு ரோம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

டோக்கியோ ஒலிம்பிக்கில் இரண்டு தங்க பதக்கங்களை வென்ற உலகின் அதிவேக மனிதர், லாமண்ட் மார்செல் ஜேக்கப்சுக்கு ரோம் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், இரண்டு தங்க பதக்கங்களை மார்செல் ஜேக்கப்ஸ் வென்றார். இந்நிலையில், விமான நிலையத்திற்கு தனது குழந்தையுடன் வந்த வீரரை, கூடி நின்ற உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆரத் தழுவி வரவேற்றனர்.

ஒலிம்பிக்கில் தன் மகன் வெற்றி வாகை சூடுவான் என கனவு கண்டதாகவும், தற்போது தங்கம் வென்றது ஆச்சரியமாக உணர்வதாகவும் ஜேக்கப்சின் தாயார் விவியானா மசினி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments