கடன் தொல்லையால் பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, விவசாயி தம்பதி தற்கொலை?

0 4705

நீலகிரி மாவட்டம் உதகையில் கடன் தொல்லையால், பிள்ளைகளுக்கு பூச்சி கொல்லி மருந்து கொடுத்து கொன்றுவிட்டு, விவசாயி தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவசாயியான சந்திரன் - கீதா தம்பதிக்கு, ரஷித்தா என்ற மகளும், விஸ்வந்தர் என்ற மகனும் இருந்தனர். நேற்றிரவு இவர்களது வீட்டில் வளர்ந்த மாடு ஒன்று வெகு நேரமாக கத்திக் கொண்டிருந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் வீட்டின் பின் பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையிலும், பிள்ளைகள் இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையிலும் சடலமாக கிடந்துள்ளனர்.

பிள்ளைகளுக்கு அருகில் கிடந்த பூச்சி மருந்து பாட்டிலை கைப்பற்றிய போலீசார், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments