திருப்பத்தூரில் நேற்றிரவு பெய்த கனமழையால் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் மழைநீர் தேங்கியது..!

0 9038

திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக ரயில்நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

ரயில் நிலையத்தில் 3 மற்றும் நான்காம் நடைமேடையில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏலகிரி எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. ரயில்வே ஊழியர்கள் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில் மழைநீருடன் கழிவுநீரும் சேர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் மேட்டுப்பாளையம் பள்ளிப்பட்டு சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments