மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் -பசவராஜ் பொம்மை நம்பிக்கை

0 2422

மேகதாதுவில் அணையை கட்ட மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்தார்.

அணை கட்டுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டு வருவதுடன், மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி எனவும் அவர் கூறினார்.

தண்ணீர் விஷயத்தில் தமிழகம் எப்போதும் அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டிய முதலமைச்சர் பசவராஜ், அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியும், இந்த திட்டத்தின் உண்மை நிலையையும் மத்திய அரசிடம் தானே நேரில் எடுத்துக்கூற உள்ளதாகவும் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments