பாகிஸ்தான் உதவியுடன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை பிடிக்கும் திட்டத்தில் தாலிபன்கள்

0 2978

பாகிஸ்தான் வழங்கும் ஆயுதங்கள் மற்றும் இதர உதவிகளை வைத்துக் கொண்டு, தலைநகர் காபூலை பிடிக்கும் திட்டத்துடன் தாலிபான்கள் முன்னேறிக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2 நாட்களில் மட்டும் 5 மாகாண தலைநகரங்களை அவர்கள் கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது. மத்திய ஆசியா மற்றும் ஈரானில் இருந்து அதிபர் அஷ்ரப் கனியின் அரசுக்கு கிடைத்து வரும் வர்த்தக வருவாய் மற்றும் இதர சப்ளைகளை துண்டிக்கும் நோக்கத்துடன் அவர்கள் முன்னேறி வருவதாகவும்  கூறப்படுகிறது. 

முக்கிய எல்லை சாவடிகளை தாலிபன்கள் கைப்பற்றி உள்ளதால் சுங்க வருவாயில் சுமார் 60 சதவிகிதம் அவர்களின் கைகளுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments