கொண்டாட்டத்தில் திளைத்த ஆதிகுடிகள்..! சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு கலைநிகழ்ச்சிகள் கோலாகலம்

0 2846

சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆதிகுடிகளின் கலை நிகழ்ச்சிகள் களைகட்டின.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே செம்மணாரை கிராமத்தில் இருளர்கள் மற்றும் குறும்பர்கள் வசித்து வருகின்றனர். சர்வதேச பழங்குடியின தினத்தையொட்டி இக்கிராமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பழங்குடியின குழந்தைகளும், பெண்களும் பாரம்பரிய இசைக் கருவிகளை வாசித்தபடி காட்டுபலா மரத்தை வணங்கினர்.

தாங்கள் உபயோகப்படுத்தும் பாரம்பரிய தானிய வகைகள் மற்றும் மூங்கில் மூலம் உருவாக்கப்பட்ட இசை கருவிகளை அங்கு காட்சிபடுத்தியிருந்தனர்.

பழங்குடியின மக்கள் தங்களது கலாச்சாரத்தை வெளிக்கொணரும் வகையில் பாரம்பரிய இசையை இசைத்து நடனமாடினர்.

நகர்ப்புறங்களில் நாளுக்கு நாள் நாகரிகம் மாறிவரும் சூழலில், பழங்குடியின மக்கள் இன்னும் தொன்மையைக் கைவிடாமல் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments