ஜார்க்கண்டில் அமைச்சரை சந்திக்கச்சென்ற மாணவிகள் மீது போலீசார் தடியடி

0 2298

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைச்சரைச் சந்திக்க வந்த 12ம் வகுப்பு மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

தன்பத் மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்யக் கேட்டு தேர்வு எழுதிய மாணவிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தாவைச் சந்திக்க வேண்டும் என்று அவர்கள் போராட்டம் நடத்தினர்.

அதிகாரிகளுக்கும் மாணவிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து போலீசார் தடியடி நடத்தி மாணவிகளைக் கலைந்து போகச் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments