வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மோசமான தோல்வி..! 62 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது

0 2829

ங்காளதேசத்துக்கு எதிரான 5-வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா மிக மோசமான தோல்வியை தழுவியது.

டாக்காவில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 13 புள்ளி 4 ஓவர்களில் 62 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சாகிப் அல்ஹசன் 4 விக்கெட்டுகளையும், சைபுதீன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன் மூலம் டி20 தொடரை 4-க்கு 1 என்ற கணக்கில் வங்காளதேசம் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, டி20 கிரிக்கெட் போட்டிகளில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments