காஷ்மீரில் பாஜக பிரமுகர், அவரது மனைவி சுட்டுக் கொலை; ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் இருவர் கைது

0 2209

காஷ்மீரில் பாஜக பிரமுகரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள லால்சாக் என்ற இடத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசூல் தர்.

பாஜகவில் பொறுப்பில் உள்ள இவரும், இவரது மனைவியும் நேற்று ஹோட்டலில் இருந்து வீடு திரும்பினர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதி சுட்டதில் குலாம் ரசூலும் அவரது மனைவி ஜவாஹிரா பேகம் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதுதொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த இரு தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments