கடல்சார் பாதுகாப்பு குறித்து ஐநா பாதுகாப்புச் சபையில் பிரதமர் மோடி தலைமையில் விவாதம்

0 1191

ஐநா சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் முதன்முறையாகப் பேசிய பிரதமர் மோடி, கடல் சார் பாதுகாப்பு தொடர்பாக 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினரான இந்தியா, சுழற்சி முறையில் இந்த மாதத்திற்கு தலைமைப் பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு தொடர்பாக காணொலியில் நடைபெற்ற விவாதத்திற்கு தலைமை வகித்துப் பேசிய பிரதமர் மோடி, புவியின் எதிர்காலத்துக்குப் பெருங்கடல்கள் மிகவும் முதன்மையானவை என்றும், கடல் வழித்தடங்கள் பன்னாட்டு வணிகத்தின் உயிர்நாடிகள் எனவும் குறிப்பிட்டார்.

கடல்சார் தகராறுகளை அமைதியாகப் பேசித் தீர்ப்பது, கடல்சார் போக்குவரத்துக்கு உள்ள அச்சுறுத்தல்களைக் கூட்டாக எதிர்கொண்டு முறியடிப்பது உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்மொழிந்து மோடி பேசினார்.

கடற்கொள்ளை, பயங்கரவாதம் ஆகியவற்றால் கடல் வழித் தடங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும் கடல்சார் வணிகத்தைச் சார்ந்தே நாடுகளின் வளம் உள்ளதால் அதில் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கென்யா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் இந்த காணொலி மாநாட்டில் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments