ஓட்டுநரின்றித் தானாக நகர்ந்து சென்ற ரயில்.. பென்டோகிராப் உடைந்ததால் தானாக நின்றது..!

0 2859
ஓட்டுநரின்றித் தானாக நகர்ந்து சென்ற ரயில்

அரக்கோணம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த மின்சார ரயில் ஓட்டுநரின்றித் தானாக 300 மீட்டர் தொலைவுக்குச் சென்றது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆறாவது தடத்தில் 8 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில் நிறுத்தப்பட்டிருந்து.

மாலை 5 மணியளவில் இந்த ரயில் ஓட்டுநரின்றித் தானாக உருண்டு 300 மீட்டர் தொலைவு சென்றது. அப்போது ரயில் எஞ்சினின் மேலே மின்கம்பியில் உரசிச் செல்லும் பென்டோகிராப் உடைந்ததால் ரயில் நின்றது.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. நிறுத்தப்பட்ட ரயில் நகராமல் இருக்கச் சக்கரத்தின் முன் இரும்பாலான முட்டுக்கட்டை வைப்பது வழக்கம் என்றும், அதை வைக்க ஊழியர்கள் மறந்து விட்டதால் ரயில் தானாக நகர்ந்து சென்றதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments