பருவநிலை மாற்றம் மனிதகுலத்திற்கே அவசரகால அபாய எச்சரிக்கை - ஐ.நா

0 3280
பருவநிலை மாற்றம் மனிதகுலத்திற்கே அவசரகால அபாய எச்சரிக்கை

பருவநிலை மாற்றம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள ஐ.நா. அது மனிதகுலத்திற்கே அவசரகால அபாய எச்சரிக்கை என தெரிவித்துள்ளது.

பூமி மிகவேகமாக வெப்பயமயமாகி வருகிறது,கடல் நீர்மட்டம் மிகவேகமாக அதிகரிக்கிறது,நிலப்பகுதிகளில் அதீத வெப்பத்தின் தாக்கம் தீவிரமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் கடும் வெப்பம், அதிகனமழை, வறட்சி ஏற்படுவது அடிக்கடியும், தீவிரமாகவும் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் புவிவெப்பமயமாதலை மட்டுப்படுத்த முடியும் என்றாலும், அதற்கு காரணமான பெட்ரோலியம், நிலக்கரி பயன்பாட்டை பெருமளவில் உடனடியாக குறைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments