சத்தியமங்கலம் வழியாக தமிழகம் வருபவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி

0 1777
சத்தியமங்கலம் வழியாக தமிழகம் வருபவர்கள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதி

கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகத்திற்குள் வருபவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து கர்நாடக மாநிலத்தில் இருந்து சத்தியமங்கலம் வழியாக தமிழகம் வரும் பயணிகள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட RTPCR பரிசோதனை நெகடிவ் சான்றிதழ் சமர்க்கப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனையடுத்து கர்நாடக எல்லை பகுதியான தாளவாடி மலைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறையினர், சான்றிதழ் இல்லாமல் வரும் பயணிகளை RTPCR பரிசோதனை செய்த பின்னரே அனுமதித்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments