பிரதமரின் உழவர் நிதியுதவித் திட்டத்தில் விவசாயக் குடும்பங்களுக்கு நிதி

0 2742
பிரதமரின் உழவர் நிதியுதவித் திட்டத்தில் விவசாயக் குடும்பங்களுக்கு நிதி

பிரதமரின் உழவர் நிதியுதவித் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் உள்ள 9 கோடியே 75 இலட்சம் விவசாய குடும்பங்களுக்கு மொத்தம் 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயைப் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்துள்ளார்.

விவசாயக் குடும்பங்களுக்கு மூன்று தவணைகளாக ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. 2018 டிசம்பரில் தொடங்கப்பட்ட திட்டத்தில் இதுவரை 8 முறை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஆகஸ்டு முதல் நவம்பர் வரையுள்ள காலத்துக்கான இரண்டாவது தவணையைப் பிரதமர் மோடி விடுவித்துள்ளார். அப்போது பேசிய அவர், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கூட சாதனை அளவில் உணவுதானியம் விளைவித்தது விவசாயிகளின் வலிமையைக் காட்டுவதாகத் தெரிவித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments