நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டணியாக மாற்றத் தலைவர்களின் பேச்சுக்கள் தொடர வேண்டும் - ஜெய்ராம் ரமேஷ்

0 3009
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை கூட்டணியாக மாற்றத் தலைவர்களின் பேச்சுக்கள் தொடர வேண்டும்

நாடாளுமன்றத்தில் ஒற்றுமையாகச் செயல்படும் எதிர்க்கட்சிகளைத் தேர்தல் கூட்டணியாக மாற்றத் தலைவர்கள் நிலையிலான பேச்சுக்கள் தொடர வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், நாடாளுமன்றத்துக்கு வெளியே உள்ள கருத்துக்களின் பொதுவான தன்மையை எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை காட்டுவதாகத் தெரிவித்தார். ஒரே கருத்துடைய கட்சிகளைக் கூட்டித் தலைவர்கள் நிலையிலான பேச்சுக்களை இருமுறை நடத்தி கொரோனா, வேளாண் சட்டங்கள் குறித்த கோரிக்கையைப் பிரதமரிடம் வழங்கியதாகக் குறிப்பிட்டார்.

இரு சந்திப்புகளின்போதும் ராகுல் காந்தி இருந்ததைக் குறிப்பிட்ட அவர்,தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை உருவாக்கத் தலைவர்கள் நிலையில் இன்னும் பல சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments