தெலங்கானாவில் புதிதாக வாங்கிய காரை ஓட்டிப்பழக முயன்ற இளைஞரால் விபரீதம்: நூலிழையில் தப்பிய சிறுவர்கள்

0 3009

தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் புதிதாக வாங்கிய காரை ஓட்டிப்பழக முயன்ற இளைஞர், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

ராமச்சந்திரபுரம் சாய் நகர் காலனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் புதிதாக வாங்கிய காரை ஓட்டிப்பழக முயன்றுள்ளார். அந்த இளைஞருக்கு சரிவர கார் ஓட்ட தெரியாததால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் கார் வேகமாக வருவதை பார்த்ததும், அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்து குறித்து ராமச்சந்திரபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments