ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்துள்ளது - வெங்கைய நாயுடு

0 2271

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாகவும், தன்மதிப்பை மீட்டெடுக்கும் வகையிலும் அமைந்ததாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தொடங்கியதும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் உயிர்த்தியாகம் செய்தவர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் பேசிய வெங்கைய நாயுடு, அதிகப் பதக்கங்கள் பெற்றதால் மட்டுமல்லாமல், அதிகம் பேர் பதக்கச் சுற்றுக்குச் சென்றதாலும் ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குச் சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

ஈட்டி எறியும் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் பெற்றது நம்மாலும் கூட முடியும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments