ரயிலில் குட்கா கடத்தி வந்த இளைஞர்... போலீசாரை கண்டதும் தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்தபோது உயிரிழப்பு

0 3301

மதுரை வாடிபட்டி அருகே  குட்கா பொருட்களை கடத்தி வந்த இளைஞர்,  போலீசாரை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயன்ற போது தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தார். 

இளையான்குடி பகுதியை சேர்ந்த சிக்கந்தர் அராபாத் என்பவர்  பெங்களூரு சென்று 100 கிலோ குட்கா பொருட்களை வாங்கிக் கொண்டு,  தூத்துக்குடி செல்லும் ரயிலில் வந்துகொண்டிருந்தார்.

வாடிபட்டி அருகே அவரது நண்பர்களை ரயில்வே போலீசார் விசாரிப்பதை கண்ட சிக்கந்தர் அராபாத் தானும் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த போது அருகாமை தண்டவாளத்தில் விழுந்து உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments