"ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இதயத்துக்கு நெருக்கமாக தலையணை அருகில் வைத்து தூங்கினேன்.." -நீரஜ் சோப்ரா

0 4215

லிம்பிக்கில் வாங்கிய தங்கப்பதக்கத்தை இதயத்துக்கு நெருக்கமாக தலையணை அருகில் வைத்து தூங்கியதாக நீரஜ் சோப்ரா விவரித்துள்ளார்.

காயம் அடைந்த நாள் முதல் தங்கப்பதக்கத்தை வென்ற ஈட்டி எறிதல் போட்டி வரை தமது அனுபவங்களை அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளார்.

23 வயதான நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கின் இறுதி நாளான நேற்று புன்னகை பொருந்திய முகத்துடன் அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டே வலம் வந்தார். போட்டிக்கு முந்தைய இரவு 12.30 மணிக்கு தூங்கி காலை 5.30 மணிக்கு எழுந்துக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தன்னுள் ஆற்றல் பொங்கியதால் தூங்கமுடியவில்லை என்று கூறிய நீரஜ் சோப்ரா பதக்கம் வென்ற அன்று இரவு நன்றாக உறங்கியதாக செய்தியாளர்களிடம் பகிர்ந்துக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments