ஒலிம்பிக் மாரத்தானில் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் வாட்டர் பாட்டில்களை தட்டி விட்ட பிரான்ஸ் வீரர்..! பல்வேறு தரப்பினரும் கண்டனம்

0 11949
ஒலிம்பிக் மாரத்தானில் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் வாட்டர் பாட்டில்களை தட்டி விட்ட பிரான்ஸ் வீரர்..! பல்வேறு தரப்பினரும் கண்டனம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் வீரர் மற்றவர்களுக்கு கிடைக்கவிடாமல் குடிநீர் பாட்டில்களை தட்டி விட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்களுக்கான 26 மைல் தூரத்திற்கான மாரத்தான் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்று ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களோடு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மோர்ஹட் அம்டவுனி என்பவரும் 14 வது நபராக ஓடிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் வீரர்களுக்கு குடிப்பதற்காக சாலையோரத்தில் குடிநீர் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. சில வீரர்கள் குடிப்பதற்கு பாட்டில்களை எடுத்த போது, பிரான்ஸ் வீரர் மட்டும் பாட்டில்களைத் தட்டி விட்டார்.

இதனால் பின்னால் வந்த மற்ற வீரர்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடினர். மோர்ஹட்டின் இந்தச் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments