மும்பையில் மின்சார ரயில்களில் ஆக.15 முதல் 2 தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி

0 2179

மும்பை மின்சார புறநகர் ரயில்களில் இரண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஆகஸ்ட் 15 முதல் பயணிக்கலாம் என்று மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

மொபைல் செயலி மூலமாக பயணிகள் ரயில் மாதாந்திர அட்டைகளை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாக மாநகராட்சி வார்டு அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மாதாந்திர பயண அட்டையைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புனே மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் இரவு 8 மணி வரை கடைகளைத் திறக்கவும் உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரை செயல்படவும் அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments